Thursday, 18 August 2016

I am back to IT.


இந்த பதிவிற்காக அங்கு ஒரு நல்ல உள்ளம் என் மேல் கோபம் கொள்ளும். பரவாயில்லை.
சரியாக 8 வருடங்களுக்கு முன்பு நிறைய காரணங்களுக்காக லட்சங்களில் பணம் கொடுத்த வேலையை வேண்டாம் என விட்டேன். அதற்கு பிறகு நடந்தது ஊர் அறிந்தது. இடையில் சில முயற்சிகள் நல்ல பலன் கொடுத்த முயற்சிகள் கை விடப்பட்டது.

இந்த சமுதாயத்தில் ஒரு பழக்கம் உண்டு.  ஒரு மனிதர் வெற்றியில் இருந்து சில படிகள் சறுக்கினால் நாம் நம்மை அறியாமல் மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவோம். அதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்து உள்ளேன்.

திருமண விசேஷங்களிள் தொடங்கி  WhatsApp பதிவு வரை ஒதுக்க பட்டு உள்ளேன்.   நம்மிடம் busy என்று சொல்லிவிட்டு , புறம் பேசுபவர்கள் நிறைய உண்டு.

என் முன் you are inspiration for us என்று சொல்லி விட்டு என் வீட்டின் அருகில் வந்தால் கூட என்னை தவிர்த்தவர்கள் பல உண்டு.   நான் அறிந்து மனம் பொறுக்காமல் கேட்டால் பல காரணங்கள் அடுக்கப் படும்.   Stop Flashback...

12வருடங்களுக்கு பிறகு நான் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன்.  இதில் எனக்கு உடனடியாக உதவியது என் அருமை சகோதரி Sushma . Thank you dear. என்னை எனக்கு உணர்த்திய interview அது. நிறைய தேடல்கள். நிறைய அழைப்புகள். எனக்கு சில opportunity forward செய்து encourage செய்து , இப்படி பல உண்டு என உணர்த்தியது என் தம்பி மனைவி Janani. Thank you Janani.

என்னுடைய அனைத்து downfall ல் என்னுடன் உடன் இருந்து மேலே இழுத்து வந்தவர்கள் என் உடன் பிறந்த சகோதரி Aswini and உடன் பிறவா சகோதரி Ganthavalli. Special mention to my சித்திs and  appiyas (பெயர்கள் போட்டால் குடும்பத்தில் பல குழப்பங்கள் வரும. None is same forever. இன்று நமக்கு பிடித்தவர் நாளை பிடிக்காமல் போகலாம்)  and esp Narayana Periappa.


நிறைவாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் மீண்டும் ஆரம்பம் செய்த பணியில் முதல் மைல்கல்.   Yes.. My first PoC presentation got accepted and is the winning bid.  என்னை அறிந்தவகளுக்கு தெரியும் ஒரு மாதமாக நான் பட்ட பாடு.  

இதை நான் இந்த Blog சொல்ல  காரணம் I was waiting. now I am back.  யாருக்கு வேண்டுமானாலும் என் நிலைமை வரலாம். துவண்டு விடாதீர்கள். எழுந்து நில்லுங்கள்.  நீங்கள் உங்கள் வசப்படுவீர்கள்.  பிறகு உலகம் உங்கள் வசப்படும்.

உடன் company name என்று கேட்க வேண்டாம். இன்னும் சில படிகள் ஏறிய பின் அறிவிப்பேன்.

நான் எழுதிய பதிவில் உள்ளது போல் நானும் உங்களில் யாரையேனும் ஒதுக்கி இருக்கலாம். அதற்கு இந்த பதிவின் மூலம் மன்னிக்க கோருகிறேன்.

நமக்கு வந்தால் தானே காய்ச்சலும் தலைவலியும் தரும் கஷ்டம் தெரிகிறது.  என் மனவலி இல்லை இந்த பதிவு.  என் வெற்றி பற்றிய தம்பட்டம். Even a mountain can't stop a strong river.

No comments:

Post a Comment